ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதி ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. பாந்தம் நானாஜி, ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கைப்பந்து போட்டி அனுமதி தொடர்பாகத் தடவியல் மருத்துவத்துறை தலைவரான டாக்டர் உமா மகேஸ்வர ராவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மருத்துவ சங்கம் எம்.எல்.ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணிடம் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தது. மருத்துவர் தாக்குதல் சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது தவறை உணர்ந்த பாந்தம் நானாஜி எம்.எல்.ஏ, நேற்று தனது வீட்டில் யாகம் நடத்தி மன்னிப்பு கேட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது செயலுக்காக வருந்தி, யாரும் இச்சம்பவத்தை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், பவன் கல்யான் பிறரது தவறுக்காக தவம் இருக்கும் நிலையில் அவரை முன்னுதாரணமாக கொண்டு நடந்த தவறுக்கு பொறுப்பேற்கிறேன் என்றும் கூறியுள்ளார்.