விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாஸ்கரன் என்ற வழக்கறிஞர் வசித்து வந்திருந்தார். சம்பவத்தன்று இவர் காரில் அமர்ந்திருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கு சென்று பாஸ்கரனை தாக்கி அவரிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி உள்ளனர். இது குறித்து பாஸ்கரன் முன்பகை காரணமாக திமுக கவுன்சிலர் மணி முருகன் என்பவரின் தூண்டுதலின் அடிப்படையில் பாண்டி, அன்பு கணேஷ், விக்னேஷ் ஆகியோர் தான் இந்த தாக்குதலின் நடத்தியதாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திமுக கவுன்சிலர் மணி முருகன் மற்றும் விக்னேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணையில் நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள அன்பு கணேஷ் பாண்டி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்