அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் உதயநத்தம் கிராமத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு நேரத்தில் கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திகேயனின் வீட்டிற்கு வெளியே உருட்டு கட்டைகளுடன் சிலர் நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.  இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் ஏன் இங்கு நின்று சண்டை போடுகிறீர்கள்? நீங்கள் யார்? என கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த அவர்கள் கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கார்த்திகேயன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நெடுமாறன், ஜெயமணி, கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த மாறன், ஜெயக்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.