
பிரேசிலில் நடக்கவிருக்கும் தேர்தல் சம்பந்தமாக நேரடி ஒளிபரப்பு நடந்தது. இதில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது வேட்பாளர் ஒருவர் போட்டியாளரை நாற்காலியால் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை 16 வினாடிகளே ஓடிய இந்த வீடியோவில்,
பாப்லோ மார்க்கெல் நேரடி ஒளிபரப்பில் விவாதித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜோஸ் லூயிஸ் டேடெனா நாற்காலியால் பாப்லோ மார்க்கெல்லை எதிர்பாராத விதமாக தாக்கினார்.
இதனால் பாப்லாவிற்கு விலா எலும்பு முறிந்து மூச்சு விடுவதில் சிரமமாகி உள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.இதனால் நடுவர் நேரடி ஒளிபரப்பை நிறுத்திவிட்டு விளம்பரங்களை போட்டு விட்டார்.