
முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மலை அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள் விரைவாகவும், இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளன.
இந்த ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது உண்டு. அப்போது ரோப் கார் வசதி நிறுத்தப்படும். அதன்படி நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழனிக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை அல்லது மின் இழுவை ரயில் மூலம் மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.