தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் பூண்டு விலை கிலோ 450 முதல் 600 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உடலுக்கு நல்லது என்பதால் உணவுகளில் பூண்டு சேர்க்கப்படுவதோடு ஊறுகாய் தயாரித்தும் விற்பனை செய்கிறார்கள். பொதுவாக ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் தான் பூண்டுகள் விளைவிக்கப்படுகிறது. ஆனால் பருவ மழை சரிவர இல்லாததால் பூண்டு விளைச்சல்  சரிந்தது. இதனால் பூண்டின் விலை அதிகரித்து காணப்படும் நிலையில் தற்போது விலை குறைந்த சீன பூண்டுகளை விற்பனை செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது சீனாவில் இருந்து குஜராத் வழியாக தமிழகத்திற்கு பூண்டுகள் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. இதனை 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கொள்முதல் செய்து சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்களாம். கடந்த 2014 ஆம் ஆண்டு அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதாக கருதி சீன பூண்டுகள் தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது சீன பூண்டுகள் தமிழக சந்தையில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.