ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான  3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா 12 ரன்களும், விராட் கோலி 22 ரன்களும், பரத் 17 ரன்களும், அக்சர் 12 ரன்களும், உமேஷ் 17 ரன்களும் எடுத்தனர். இவர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி 109 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மேலும் ஆஸ்திரேலியா அணியில் மேத்யூ குஹ்னெமன் 5 விக்கெட்டுகளும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.