
மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கொரோனா காலகட்டத்திலே மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது. மக்கள் கஷ்டப்பட்டார்கள். அது என்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் நியாய விலை கடைகளில் 11 மாத காலமாக விலையில்லா அரிசி, விலையில்லா சர்க்கரை, விலை இல்லா மண்ணெண்ணெய் கொடுத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். அதோடு குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் அந்த காலத்தில் கொடுத்தோம்.
இந்த மாதிரி மாநகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால் மீண்டும் ஒருமுறை மாநகர பகுதியில் இருக்கிறவர்களுக்கு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். ஆனால் இப்படி நாலு வருடம் இரண்டு மாத காலத்திலே வரட்சியை சந்தித்தோம். வரட்சியிலே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2, 247 கோடி நிவாரணத் தொகை வழங்கினோம்.
விவசாயிகளின் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக நாங்கள் இன்சுரன்ஸ் கம்பெனியிலிருந்து இழப்பீடு தொகையை பெற்று தந்தோம். அதே போல ஏழை எளியவர்கள் உணவில்லாமல் தவிர்க்கக்கூடாது என்பதற்காக நாள் தோறும் 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகத்தில்… சமூக கூடங்களில் உணவு தயாரித்து ஏழைகளுக்கு வயிறார உணவு கொடுத்தோம். கர்ப்பிணி பெண்களுக்கு முதியோர்களுக்கு மாற்றி திறனாளிகளுக்கு வீட்டுக்கு சென்று உணவு கொடுத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என பேசினார்.