
ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூரபஞ் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி முசு முர்மு மற்றும் கர்மி முர்மு இந்த தம்பதிக்கு ஏழு வயது மற்றும் பத்து மாதம் என இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். முசு முர்மு தமிழ்நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது வேலையை முடித்துவிட்டு ஒடிசாவிற்கு வந்தபோது இவரது மனைவி 10 மாத பெண் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை முசு முர்மு அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் குழந்தையை தனது மனைவி விற்றது தெரிய வந்தது.
இதனால் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குழந்தையின் தாயுடன் சேர்த்து குழந்தை இல்லா தம்பதி மற்றும் இவர்களிடையே சந்திப்பை உருவாக்கிய நபர் என நான்கு பெயரை கைது செய்துள்ளனர். குழந்தையின் தாய் கர்மி முர்முவிடம் விசாரித்த போது குழந்தையை கவனித்துக் கொள்ள போதிய அளவு பணம் இல்லாத காரணத்தினால் குழந்தை இல்லா தம்பதிக்கு 800 ரூபாய்க்கு குழந்தையை விற்று விட்டதாக கூறியுள்ளார்.