
பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் எழுந்து வரும் நிலையில், தற்போது சல்மான்கானிடம் 5 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து காவல்துறையை ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொண்டு சல்மான்கான் உயிருடன் இருக்க விரும்பினால் அவர் பிஷ்னோய் சமூகத்தினர் கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதை சல்மான்கான் செய்யாவிட்டால் அவரை கொன்று விடுவதாக தெரிவித்துள்ளனர்.
மிரட்டல் விடுத்த நபர் மராட்டிய அமைச்சர் பாபா சித்திக் கொடையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் என்று குறிப்பிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சல்மான் கானுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு இந்த மிரட்டலில் தொடர்புள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.