மத்திய பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவு நீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் எடுத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் தொட்டியில் கிடந்த 4 உடல்களை மீட்டனர். இறந்தவர்களில் ஒருவர் வீட்டில் உரிமையாளர் ஹரி பிரசாத் பிரஜாபதியின் மகன் சுரேஷ் பிரஜாபதி (30), மற்றொருவர் கரண் ஹல்வாய் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மற்ற இரண்டு உடல்களின் அடையாளம் இன்னும் காணப்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் சுரேஷ் மற்றும் கரண் தனது நண்பர்களுடன் ஒரு விருதுக்கு ஜனவரி 1ம் தேதி அவரது வீட்டிற்கு சென்று உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின் அவர்கள் கொல்லப்பட்டு உடல்களை கழுவுநீர் தொட்டியில் வீசி இருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றோம். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது என்று கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.