
ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டடோர் தொடர்ந்து வழக்கில் நெல்லை ஆட்சியர் எஸ்.பி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்காள் பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் தங்களுக்கு எஸ்.சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உரிய இழப்பீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் இன்று மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்கு பதிவு செய்து, சட்ட விரோத காவலில் வைத்து காவல்துறையினர் தன்னையும், தனது சகோதரர்களையும் கடுமையாக தாக்கி பற்கள் பிடுங்கப்பட்டன. இந்த நிலையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தனக்கும், தனது சகோதரர்களுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின்படி உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
தனது தாய் ஏற்கனவே இழப்பீடு வழங்க கோரி கடந்த ஜூன் மாதம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி, மாவட்ட கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.