சீனாவில் இருந்து கடந்த 1949 ஆம் ஆண்டு தைவான் அரசு தனியாக பிரிந்து சென்றது. தற்போது பிரிந்து சென்ற தைவானை தங்களுடன் இணைக்க சீனா அடிக்கடி போர் முயற்சி செய்து வருகிறது . தைவான் எல்லைப் பகுதியில் அடிக்கடி பதட்டமான சூழ்நிலை ஏற்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவை சேர்ந்த 7 பல்கலைக்கழகங்களுக்கு தைவான் அரசு தடை விதித்துள்ளது.

அதன்படி பெய்ஜிங் தொழில்நுட்ப நிறுவனம், நான்ஜிங் விமானவியல், பீஹாங்  மற்றும் விண்வெளி பல்கலைக்கழகம் போன்ற 7 பல்கலைக்கழகங்களுக்கு தைவான் அரசு தடை விதித்துள்ளது. மேலும் “தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலின் காரணமாக பல்கலைக்கழகங்களுக்கு தடை விதிப்பதாகவும் அங்குள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் எவ்வித கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது” எனவும் அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.