பாஜக ஆட்சி செய்யும் உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் புல்டோசர் நடவடிக்கை அதிக அளவில் இருப்பதாக புகார் எழுந்தது. அதாவது புல்டோசர் நடவடிக்கை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்கும் நிலையில் அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வீடுகளையும் இடிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்ற வழக்கில் தொடர்புடையவர் மற்றும் குற்றவாளி என்பதற்காக ஒருவர் வீட்டை எப்படி இடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கில் விசாரணையை ஒத்தி வைத்தனர். அதன்படி நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது நீதிமன்றத்தின் அனுமதி இன்றி எந்த ஒரு கட்டிடங்களையும் இடிக்கக்கூடாது என்று கூறிய நீதிபதிகள் புல்டோசர் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.