காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இரு நாடுகளும் எல்லையை மூடுவதாக அறிவித்துள்ள நிலையில், எல்லையில் நாள்தோறும் கொடி இறக்கும் நிகழ்வில் இரு நாட்டு வீரர்கள் கைகுலுக்கும் நிகழ்வுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதாவது பஞ்சாப் வாகா அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்கும் நிகழ்வு நடைபெறும். அதற்கு தற்போது மத்திய அரசு தடை விதித்துள்ளது.