
காரைக்குடி அருகே உள்ள ICICI வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான 533 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துள்ளனர் இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் ஆகும். இதனை கவரிங் நகையாக மாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
வங்கியின் மண்டல மேலாளர் தலைமையில் மேற்கொண்ட ஆய்வின்போது, இந்த மோசடி தெரியவந்தது. அப்போதும் இதற்கு முன்னும் தங்க நகைகளை ஏமாற்றி, கவரிங் நகைகளால் மாற்றியதற்கான தகவல்கள் புலப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் காரைக்குடி ஊருக்கே சேர்ந்தவராகவும், மற்ற மூவர் வங்கி ஊழியர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மோசடி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.