
வங்கிக் கணக்கு வாயிலாக குறைந்த வட்டியில் உடனடி கடன் பெறுவது எப்படி என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். ஏராளமான வங்கிகளானது சம்பள கணக்கு வைத்திருப்போருக்கு கடன் வழங்குகிறது. ஆகவே உங்களுக்கும் சம்பளக்கணக்கு இருந்தால் அத்தகைய சலுகை ஏதேனும் இருக்கிறதா என சரிபார்க்கவும். சிறப்பு சலுகைகள் இருப்பின் சில மணிநேரங்களிலேயே கடன் தொகையை பெறலாம். அதேபோல் கிரெடிட் கார்டு வாயிலாகவும் கடன் பெறலாம். பல்வேறு வங்கிகள் கிரெடிட்கார்டு வாடிக்கையாளர்களுக்கு உடனடி கடன்களை வழங்குகிறது. உங்களுக்கும் இதேபோன்ற சலுகை இருந்தால் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மேலும் கிரெடிட் ஆப் வாயிலாகவும் உடனடி கடன் பெறலாம். இந்த வசதி பெரும்பாலும் “Cred app” பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் கிடைக்கும். அதோடு Credit cash ஆப்ஷனும் இருக்கிறது. இருப்பினும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். அதேநேரம் Paytm வாயிலாக கடன் பெறலாம். மற்ற செயலிகளை காட்டிலும் Paytm-ல் இருந்து விரைவாக கடன் பெறலாம். இதை பேடிஎம் நிறுவனமும் தெரிவித்து உள்ளது.
இதுதவிர உடனடி கடன் செயலிகளும் இருக்கிறது. இதன் வாயிலாகவும் கடன் பெறலாம். Patience, Dhani, Navi, CreditB, Money View உள்ளிட்ட பல ஆப்ஸ்கள் மூலம் ஈஸியாக உடனடி கடன் பெறலாம். இருந்தாலும் இப்படி கடன் வாங்கினால், அதிக வட்டி விகிதத்தை சுமக்க வேண்டி இருக்கும். ஆனால் வட்டி விகிதங்கள் அதிகம் இருக்கலாம். ஆகவே நீங்கள் கடன் பெற விரும்பினால், மேலே குறிப்பிட்டுள்ள முறைகளை பயன்படுத்தலாம். அதே நேரம் வங்கியின் வாயிலாகவும் கடன் வாங்கலாம். தகுதியானவர்கள் எளிதாக கடன் பெற கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருத்தல் வேண்டும். அப்போது தான் ஈஸியாக கடன் பெற முடியும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.