இந்திய ரிசர்வ் வங்கி தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நியாயமற்ற கடன் வழங்குதல் நடைமுறைகள் இருக்கக் கூடாது எனவும், கடன் கட்டணங்களில் அபராத கட்டணம் என்பது கடன் ஒப்பந்தத்தின் முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத அல்லது தவறான அளவுடன் அபராத கட்டணத்தின் அளவு இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக வங்கியில் கடன் வாங்கும் போது அந்த கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த தவறினால் வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகை விதிக்கப்படும்.

இந்த அபராத தொகை அசல் தொகையுடன் சேர்க்கப்படுவதால் அதற்கும் சேர்த்து வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவின்படி அபராத தொகையை அசல் தொகையுடன் சேர்க்காமல் தனித்தனியாக வசூலிக்க வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது கடனை செலுத்த தவறும் வாடிக்கையாளர்கள் கூடுதல் வட்டி கட்டுவதை தடுக்கும். அபராத கட்டணம் என்பது ஒப்பந்தம் செய்யப்பட்ட வட்டி விகிதத்தை விட கூடுதலாக சம்பாதிப்பதற்கான வழிமுறை கிடையாது எனவும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு எச்சரித்துள்ளது. மேலும் இதனால் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை குறைந்து அவர்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.