உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் மஜூலா குஷல்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேங்க் காலனியில் வசித்து வரும் வங்கி மேலாளர் கோமல். இவர் தனது இருசக்கர வாகனத்தில் காசிராம் கேட் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எங்கிருந்தோ வந்த பட்டம் விடுவதற்காக பயன்படுத்தப்படும் சீன மாஞ்சா நூல் அவரது கழுத்தில் சிக்கி உள்ளது. இதனால் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்த அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கோமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.