
பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஏன்டா மூட்டா பசங்களா… தர்மபுரியில் இருந்து ஒரு முட்டாள் பையன் எம்.பியாக போய் இருக்கான். அவன் சொல்றான் பரமசிவனும் – பார்வதியும் குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாங்கன்னு சொல்லுறான். நான் கேட்கிறேன்… நாகமையும் – ஈவெராவும் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துனாங்க இல்ல, குழந்தையே பிறக்கவில்லை.
அப்போ நாகமையும் – ஈவேராவும் கல்யாணத்துக்கு முன்னாடியே குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்டு தான் கல்யாணம் பண்ணாங்களா… ஏண்டா…! ஆன்மீகவாதி பேசமாட்டானு நினைக்கிறீங்க. அவன் நாகரீகமா இருப்பான், நம்ம என்ன வேணாலும் கச்சடா தனமா பேசலாம்னு…. டேய்…. கச்சடா திராவிட இயக்கங்களே உங்களுக்கு இணையா கேள்வி கேட்க எங்களுக்கு தெரியும். அப்போ உன் நாகமையும் – ஈவேராவும் குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டதால, அவர்களுக்கு குழந்தை இல்லையோ, அண்ணாதுரைக்கும் குழந்தை கிடையாது.
ஏன்னா..! நம்ம முதலமைச்சர் எவ்வளவு கவலைப்படுகிறார் தெரியுமா ? செந்தில் பாலாஜி வீட்டுக்கு ஈடி வந்த உடனே, ஒரு ஆர்டர் போடுறாரு. சிபிஐ மாநில அரசாங்கத்தை கேட்காமல், வரக்கூடாது. ஏன் ? CBIஇல் இவருக்கு எதிராக வழக்கு இருக்கிறது.
மெட்ரோ ரயில் கேஸில் L 1க்கு கொடுக்கல, L 2க்கு கொடுக்கல, L 3க்கு கொடுத்த ஊழல் அரசு, அதனால அந்த L 1, L 2 கேஸ் போட்டு இருக்கான். அதுக்கு பிறகு மூன்று பேர் போட்டு இருக்கான். 6ஆவதாக நம்முடைய மாநில தலைவர் அண்ணாமலை போட்டிருக்கிறார். அதனால எந்த நிமிடத்திலும் தன் வீட்டு வாசலிலே சிபிஐ வந்துவிடும் என்பதால், இவர் சொல்றார்… சிபிஐஎன்னை கேட்காமல் உள்ளே வரக்கூடாதுன்னு…
உன்னை ஏன் கேட்கணும், நாங்க சுப்ரீம் கோர்ட் கேட்டுட்டு உள்ளே போறோம். உன்னை எதுக்கு கேட்கணும்? செஞ்சுபாலாஜியை கேட்டுகிட்டு அங்க போச்சு, கலோக்கியல் பொன்முடி, அந்த முடி கிட்ட ஒன்னும் கேக்கலையே என தெரிவித்தார்.