
ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீப் போட்டியில் பஞ்சாப் அணியுடன், சிஎஸ்கே போட்டியிட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரரான ப்ரியன்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்.
இந்த ஆட்டத்தின் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் களுக்கு 219 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 201 ரன் எடுத்து தோல்வியை சந்தித்தது.
கடந்த 3 போட்டுகளில் ஹாட்ரிக் தோல்வியை தழுவிய சிஎஸ்கே அணிக்கு, இது 4வது தோல்வி ஆகும். இந்நிலையில் தோனி மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக தமன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, குறைக்கும் நாய்கள் அனைத்தும் அவரின் ஆட்டத்தை பார்க்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு பல விமர்சனங்களைப் பெற தோனி தனது நாட்டிற்காக பல தொடர்களை வென்றவர். நீங்கள் சொல்லும் அனைத்து டிராபிகளும் அவரால் மட்டும்தான் என்று மீண்டும் பதிவிட்டுள்ளார்.