
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸினுடைய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது பிஜேபி. ராமர் கோவில் கட்டணும், கட்டி முடிச்சுட்டான். ராமர் கோவில் கட்டுவதற்கு முன்னால பாபர் மசூதி இடிக்கனும், இடிச்சு முடிச்சிட்டான். ஒரு அஜண்டா முடிஞ்சது. காஷ்மீருக்கு தரப்படுகின்ற அரசியலமைப்புச் சட்டத்தின் 370 வது உறுப்பின் அடிப்படையிலான அதிகாரத்தை ரத்து செய்யவும், செஞ்சி முடிச்சிட்டான்.
மூன்றாவது அவனுக்கு பொது சிவில் சட்டத்தை உருவாக்கணும். முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனி பர்சனல் சட்டம் இருக்கக் கூடாது. ஷரியத் சட்டம் இருக்க கூடாது. அதற்கு பதிலாக கான்ஸ்டிடியூஷனை மாற்ற வேண்டும். அதுதான் அவர்கள் நோக்கம். ஏன்னா… அப்படி பொது சிவில் சட்டம் வந்துவிட்டால் ? கான்ஸ்டிடியூஷன் அர்த்தம் இல்லாமல் போய்டும்.
ஒன்னே ஒன்னு தான் மிச்சம் இருக்கு. பெரும்பான்மை வாத அடிப்படையில் எல்லோரும் நீ சாதியாக மோதிக் கொண்டாலும் ? பாகுபாடு இருந்தாலும், உயர்வு – தாழ்வு இருந்தாலும், இழிவுகள் இருந்தாலும், வன்கொடுமைகள் இருந்தாலும், பெண்கள் பாதிக்கப்பட்டாலும், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. நீ இந்துவாக எழுச்சி பெறு.
ஓட்டு போடு… பிஜேபியை தொடர்ந்து ஆட்சியில் அமர்த்து, எங்களுக்கு ஒருநோக்கம் இருக்கிறது. இந்த நாட்டை ஹிந்துக்களின் நாடு என்று பிரகடனப்படுத்த வேண்டும். அதற்கு தடையாக இருக்கின்ற அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசன சட்டத்தை தூக்கி எறிய வேண்டும் என தெரிவித்தார்.