
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள பகுதியில் செல்வராணி(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ஒரு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது தனது கையில் வைத்திருந்த பையில் வளையல் மற்றும் செயின் என்று மொத்தம் 13 பவுன் நகைகளை வைத்திருந்தார்.
பஸ்ஸிலிருந்து இறங்கிய போது செல்வராணி தனது பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அவரது பையில் இருந்த நகைகள் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராணி தனது பையில் இருந்த நகைகளை யாரோ திருடி விட்டனர் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.