
செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், எங்களுடைய மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களுடைய இல்லம் சென்னை பனையூரில் இருக்கிறது. அவருடைய இல்லத்தை ஒட்டி ஒரு கொடிக்கம்பம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நிறுவப்பட்டு, அந்த கொடியேற்றக்கூடிய நிகழ்வு நடக்க இருந்தது. இதற்கு மத்தியில் பனையூரில் இருக்கின்ற மனிதநேய மக்கள் கட்சி, தமுமுக போன்ற இஸ்லாமிய அடிப்படை வாதத்தை ஊக்குவிக்கக்கூடிய அந்த அமைப்பினரும், கட்சிகளும்…
எஸ்டிபிஐ என்ற தீவிரவாதத்தை அதிகமாக கையில் எடுக்கக்கூடிய அந்த கட்சியினரும், 19 இஸ்லாமியர்களை ஒன்றிணைத்து… அந்த கொடி கம்பத்தை இங்கு நடக்கக்கூடாது. இங்கு இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கிறோம். அதனால் நாங்க இங்கு நட விட மாட்டோம் என்று, திமுக உடைய தூண்டுதலின் பேரில் பகிரங்கமாகவே வன்முறை அளவிற்கு ஒரு மிகப்பெரிய போராட்டத்தையும், எதிர்ப்பையும் காட்டுகிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகள் அதை அமைதியான முறையிலேயே அணுகும் போது கூட, திமுக உடைய காவல்துறை திட்டமிட்டு வன்முறையை தூண்டுவதற்கு முயற்சி செய்யக் கூடிய ஒரு சூழலை உருவாக்குகிறது. அதனுடைய விளைவாக எங்களுடைய மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களுடைய இல்லத்தின் அருகில் இருந்த அந்த கொடிக்கம்பத்தை, காவல்துறையினர் வேண்டுமென்றே அகற்ற வேண்டும் என்று முடிவெடுத்தபோது…. இயல்பான உணர்வுள்ள ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகளும் அங்கு திரளாக ஒன்றிணைம் போது….
காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் கடுமையான முறையிலே எங்களுடைய நிர்வாகிகளை தாக்கி, பல நிர்வாகிகள் ரத்தம் சிந்தி இருக்கிறார்கள. நிச்சயமாக திமுக காவல்துறை இதற்கு பொறுப்பேற்க வேண்டும். திரு. ஸ்டாலின் அவர்கள் விதைத்த இந்த வினைக்கு நிச்சயமாக அவர் அறுவடை செய்யக்கூடியது மிகப்பெரிய மோசமான நிகழ்வாக இருக்கும் என்று நாங்கள் பகிரங்கமாக எங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.