மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பகுதியில் விஜய குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளான வைஷாலி (33) என்பவரை, அதை பகுதியைச் சேர்ந்த பாதிரியார் விமல்ராஜ் (35) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இவர்கள் 2 பேருக்கும் ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பாதிரியார் தனது குடும்பத்துடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடியேறினார். அதோடு அப்பகுதியில் உள்ள அட்வென்ட் கிறிஸ்தவ சபையின் துணை பாதிரியாராக வேலை பார்த்து வருகிறார்.

விமல்ரா பெற்றோர் மேடவாக்கத்தை அடுத்துள்ள பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வைஷாலி மற்றும் விமல்ராஜ்-க்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி விமல்ராஜ் அவரது பெற்றோரின் வீட்டிற்கு சென்று, தனது மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் செல்லும்போது உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடலை வீட்டில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு வைஷாலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி பதறிப் போய் வந்த வைஷாலியின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் விஷால்குமார், வைஷாலியின் கழுத்தில் காயம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பு இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் பாதிரியாடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தன கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.  இதற்கிடையில்  தனது மகள் கொலை வழக்கில் சந்தேகம் இருப்பதாகவும், வேறு யாரேனும் ஈடுபட்டிருக்கலாம் என்றும் மேரி சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர், அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. பாதிரியாருக்கும், ஜெபசீலா(30) என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. பாதிரியார் மும்பையில் இருந்த போது மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து, இவர்கள் இருவரும் சேர்ந்து இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவற்றை சப்ளை செய்ததும் தெரிய வந்தது.

அவர்கள் உள்ளூர் நண்பர்களுடன் சேர்ந்து இந்த தொழிலை செய்துள்ளனர், அதோடு பாதிரியார் 3000 போதை மாத்திரைகளை இருப்பு வைத்துள்ளார். இதனைப் பார்த்து சந்தேகமடைந்த வைஷாலி தனது கணவரிடம் கேட்டபோது இது காய்ச்சலுக்காக வழங்கும் மாத்திரை என்று கூறினார். இதில் சந்தேகமடைந்த அவர் தனது சகோதரன் மூலம் மும்பையில் விசாரித்தார். அப்போது இது போதை மாத்திரை என்பது தெரிய வந்தது. இதை காவல்துறையினரிடம்  கூறிவிடுவேன் என்று வைசாலி கூறியதால், பயந்துபோன பாதிரியார்  தனது காதலியுடன் கூறியுள்ளார்.

அடுத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தனர், அதற்கு போதை மாத்திரை கும்பலை தினேஷ் (23), சந்திரசேகர்(19), அரவிந்த்(23), அஜய்(24), மைக்கேல்(33), கிறிஸ்டோபர்(44) ஆகியோர் உதவியுடன் பாதிரியார் அவரது மனைவியை கொன்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் பாதிரியாரின் கள்ளக்காதலியான ஜெபசீலா மற்றும் மேற்கண்ட 6 பேர் என 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஜெபசீலா மற்றும் பாதிரியார் வீட்டில் இருந்து 3000 போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர்.