திருமணம் என்பது குடும்பத்தினரும், உறவினர்களும் இணைந்து சந்தோசமாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி. அந்த வகையில்திருமண விழாவின்போது, மணமகன் மீது மஞ்சள்,பால், நீர் போன்றவற்றை பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி நடந்து கொண்டிருக்கும் நிலையில், மணமகனின் நண்பர்கள் அவர் மீது ஓட்கா, பீர் போன்ற மதுபானங்களை பயன்படுத்தி புதிய முறையில் கொண்டாடியுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோவில் மணமகன் தரையில் அமர்ந்திருக்க, அவருடைய நண்பர்கள் ஓட்கா,பீர் உள்ளிட்ட மதுபானங்களை அவர் தலையில் ஊற்றுகின்றனர். இதற்கு மணமகன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் உற்சாகமாக தனது கரங்களில் மதுபானத்தை வாங்கி குடிக்கும் காட்சி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

திருமணம் என்பது புனிதமான நிகழ்ச்சி ஆகும். இது போன்ற நிகழ்ச்சிகளில் மதுபானங்களை கொண்டு வருவது சரியானதா? என சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் இது பாரம்பரிய வழிமுறைகளை அழிப்பதாகவும், மதுபானம் என்பது கலாச்சார விதிமுறையாக இல்லை என்றும் கண்டித்துக் கூறியுள்ளனர் . இன்னொரு பயனர் இந்தியா மாதிரி கலாச்சார ரீதியான திருமண முறைகள், தற்போது ட்ரெண்ட் என்ற பெயரில் அளிக்கப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ள நிலையில் அதற்கு சிலர் ஏன் மதுபானம் தவறு, சிவபெருமான் கூட மதுபானம் அருந்தியதாக புராணங்கள் கூறுகின்றன என்று எதிர்வாதம் செய்துள்ளார். மேலும் வைரலான இந்த வீடியோவால் சமூக வலைதளத்தில் இது குறித்த விவாதம் தீவிரமாகி வருகிறது.