பீகார் மாநிலம் போர்டு 12-வது தேர்வுகள் பிப்ரவரி 1ம் தேதி தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். ஆனால் தொடங்கிய முதல் நாளே ஏராளமான மாணவர்கள் தேர்வுக்கு தாமதமாக வந்தனர். இதனால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் தேர்வெழுத அனுமதிக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் சில மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். தேர்வு விதிகளின்படி, தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்திற்குள் நுழைய வேண்டும்.

இல்லையென்றால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல மாணவர்கள் தேர்வுக்கு தாமதமாக வந்தனர். அதனால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மாணவி ஒருவர் தேர்வு நடந்த வளாகத்தின் கேட்டின் கீழ் நுழைந்து வளாகத்திற்குள் நுழைவதற்கு முயன்றார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.