சிறந்த பணியாளர் விருது வாங்கிய நபரை கூகுள் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் 12 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கி உள்ளது. ட்விட்டரில் மொத்த ஊழியர்களை 10% பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

இதனால் ட்விட்டர் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1800 ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில் சிறந்த பணியாளர் என்ற விருது வாங்கியவரை கூகுள் நிறுவனம் பணியிலிருந்து நீக்கி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த செயலால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.