தென்கிழக்கு & அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடலில் பிபோர்ஜோய் உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. கோவாவிற்கு 920 கி.மீ., மேற்கு தென்மேற்கிலும் மும்பைக்கு 1,050 கி.மீ., தென்மேற்கிலும் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து தீவிரப்புயலாக வலுபெறும் என கூறப்பட்டது.

இந்நிலையில் அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் கோவாவுக்கு 900 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மேற்கு – தென்மேற்கில் மையம் புயல் வடக்கில் நகர்ந்து தீவிர புயலாக மாறும் எனத் தெரிவித்துள்ளது.