இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மக்களுக்கு அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் பண பரிவர்த்தனைகள் என்பதை மிகவும் எளிதாகி விட்டது. அதேசமயம் அதன் மூலம் நடைபெறும் ஏமாற்று வேலைகளும் அதிகமாகிவிட்டன.

இந்த நிலையில் உங்கள் A/C XXXX0308 வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்படுத்த இந்த லிங்கை கிளிக் செய்ய என வங்கியில் இருந்து வருவது போல சிலருக்கு மெசேஜ் வருகிறது. இந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டாம், இது ஒரு ஏமாற்று முயற்சி, நீங்கள் அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் கணக்கில் இருந்து பணம் பறிபோகும் எனவும் இது போன்ற மெசேஜ் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.