
கேரள மாநிலத்தில் உள்ள மூரியங்கரை பகுதியில் ஷாரோன் ராஜ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிரீஸ்மா என்ற பெண்ணை காதலித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி சாரம் தனது காதலியின் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து அக்டோபர் 25ஆம் தேதி ஷாரோன் உயிரிழந்தார்.
கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கிரீஸ்மா ஷாரோன் ராஜை கொலை செய்தது தெரியவந்தது. கிரீஸ்மாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயமானது. இதனால் தனது தாய் சிந்து, தாய்மாமா நிர்மல் ஆகியோருடன் இணைந்து கிரீஸ்மா ஷரோன் ராஜை கைது செய்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கிரீஸ்மா விஷம் வாங்கி கொடுத்த நிர்மல் குமார் ஆகியோரை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இரண்டாவது குற்றவாளியான கிரீஸ்மாவின் தாய் சிந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இளம் பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு இந்த கொலையை மறைக்க உதவிய கிரீஷ்மாவின் மாமாவுக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நெய்யட்டிங்கரை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.