
ராகுல் காந்தி வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனையை நிறுத்திவைக்க எந்த காரணங்களும் இல்லை என்று சொல்லி ராகுல் காந்தியின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி மீண்டும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமரை அவதூறாக பேசியதற்காக அவருக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.