மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த வருடம் பயிற்சிப் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடம்பில் ஏராளமான காயங்கள் இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அந்த ஹாஸ்பிடலில் தன்னார்வ ஊழியராக பணிபுரிந்த சஞ்சய்ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட்ட நிலையில் பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு சஞ்சய் ராய்தான் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் சஞ்சய் ராய் தான் குற்றவாளி என்ற நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அவருக்கு இன்று தண்டனை வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் தற்போது தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. மேலும் அதன்படி பெண் மருத்துவரை கொடூரமாக கற்பழித்துக் கொன்ற சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதோடு குற்றவாளிக்கு ரூ‌.50000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவில் உள்ளது. மேலும் இந்த வழக்கில் மரண தண்டனை வழங்கப்படும் என்று ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்த நிலையில் தற்போது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது