
மீண்டும் பதவியேற்கும் வகையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மோடி. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி, ராஜினாமா கடிதத்தினை வழங்கினார். இன்று மாலை நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின் மீண்டும் பிரதமராக பதவியேற்க மோடி உரிமை கோரவுள்ளார்.