நாட்டில் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டினை தாக்கல் செய்த அவர், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்சாரம், அனைவருக்கும் சமையல் எரிவாயு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற நோக்கோடு அரசு செயல்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.