சுயமரியாதை திருமணங்கள் வழக்கறிஞர் அலுவலகத்தில் நடைபெற்றாலும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அறிஞர் அண்ணா சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட ஒப்புதல் அளித்தார். ஆனால் வட மாநிலங்களில் இது இன்றளவும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் வழக்கறிஞர்  அலுவலகத்தில் திருமணம் நடந்தாலும் திருமணம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.