மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வந்து கொண்டுள்ள நிலையில் முன்னாள் உள்துறை அமைச்சரும் என்.சி.பி தலைவருமான அணில் தேஷ்முக் நார்கேட் கிராமத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரச்சாரக் கூட்டம் முடிந்தவுடன் காரில் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது கடோல்  அருகே ஜலால்கேடா பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் காரின் மீது கல்வீச்சு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தேஷ்முக் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் உயர் அதிகாரிகள் ஒன்றிணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போதா கூறியதாவது, காவல்துறையினர் கல்வீச்சு நடத்திய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனக் கூறினார். நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் தேஷ் மூக்கின் மகன் சலீல் தேஷ்முக் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை சேர்ந்த சரண்சிங் தாக்குரை எதிர்த்து போட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.