செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், இன்று அதிகாலையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சா தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள் என பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் தொடர்புடையதாக கல்லூரியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம், கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருள் பிரச்சனை தீவிரமாகி வருவதை எடுத்துக்காட்டுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டுள்ளது. மாணவர்களிடையே போதைப் பொருள் பிரச்சனையை ஒழிக்க, கல்வி நிறுவனங்கள், பெற்றோர் மற்றும் அரசு இணைந்து முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.