கனடா நாட்டில் வசித்து வரும் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராக்லேண்ட் பகுதியில் வசித்து வரும் இந்தியர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்போது சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இவருடைய கொலைக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில் அவரின் மரண செய்தியை இந்தியாவில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய தூதரகம் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று உறுதி கொண்டுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு வருத்தங்களையும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.