தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 8வது சீசனின் ஒளிபரப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 சீசன்களையும் சிறப்பாக தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு, இந்த சீசனை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 6ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களின்படி, விஜய் டிவி கணேஷ், நடிகர் ரஞ்சித், பப்லு, பூனம் பாஜ்வா, குரேஷி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுடன், சின்னத்திரை மற்றும் சினிமாவைச் சேர்ந்த பல புதிய முகங்களும் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி தொகுப்பில் வரும் இந்த சீசன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.