
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த அக்,.9 ஆம் தேதி துவங்கி, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். தற்போது 8 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 86 நாட்களை நெருங்கி இருக்கிறது.
இந்த வாரம் Ticket to Finale டாஸ்கை கமல் அறிவித்தார். இந்த டிக்கெட்டை ஜெயித்து முதல் நபராக பைனலுக்கு செல்ல இருக்கும் போட்டியாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்குகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் முக்கிய போட்டியாளரான ஷிவின் பெட்ரூமில் இருக்கும் போது கெட்ட வார்த்தை பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அவர் சொல்வதை கேட்டு கதிரவன் மிகவும் அதிர்ச்சியடைகிறார்.
தொடர்ச்சியாக இப்படி அசிங்கமான வார்த்தைகளை பேசிக் கொண்டு வரும் ஷீவின் அவர்கள் இது ஒரு personality game show என்று அவர் வாயில் கூறினார் அப்படி என்றால் உங்கள் personality இதுதானா?#BiggBossTamil6 #AramVellum#Vikraman𓃵#VaathiVikraman#Vikraman_Hero_Of_BBTamil6 #VoteForVikraman pic.twitter.com/0nefYimF6V
— சே குவேரா 🖤❤ (@Kannadasan_DMK) January 3, 2023