டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் அங்கூர் (22) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த வாரம் தசரா விழாவிற்கு சென்று வீடு திரும்பும் போது தனது சகோதரன் ‌ஹிமான்சுடன் சவாலே சாலை அருகே வந்து கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை பின்னால் ஏற்றிக் கொண்டு வந்த ஓட்டுனரே பார்த்து செல்லும்படி சொன்னார்.

இதனால் கோபமடைந்த அவர்களின் ஒருவர் ஹிமான்சுவையும் அங்கூரையும் அவர்களிடம் இருந்து வைத்திருந்த கத்தியால் குத்தி உள்ளனர்.‌ இதை அடுத்து அவர்கள் மூவரும் அங்கிருந்து உடனடியாக கிளம்பி உள்ளார். தாக்குதலில் ஹிமான்சும் மற்றும் அவருடைய சகோதரன் அங்கூர் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கூர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில் ஹிமான்சு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.