
இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் அனைவரும் பைக் டாக்ஸியை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அவர்கள் விரைவில் தங்களது இடத்திற்கு செல்ல முடிகிறது. அதோடு இதனுடைய கட்டணமும் குறைவு என்பதால் பயணிகள் பைக் டாக்ஸியை அதிக அளவில் விரும்புகின்றனர்.
இந்நிலையில் மும்பை நகரில் மிக விரைவில் பை டாக்ஸி சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம். இதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் தெரிவித்துள்ளார்.