
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி ராணிக்கு வாக்களிக்க கூடாது என்று ராஜ்பூத் சமூகத்தினர் நேற்று (மே 16) உறுதிமொழி ஏற்றுள்ளனர். ராஜ்புத் சமூக பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக பேசியதாக கண்டித்து, அந்த சமூகத்தினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.