
திமுக தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன் (CVC) அந்த சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருக்கிறது. அதில் என்ன சொல்லி இருக்காங்கன்னா… ஒன்றிய அமைச்சகங்களிலேயே உள்துறை அமைச்சக அதிகாரிகள், அலுவலர்கள் மேல தான் போன வருடம் அதிகமான ஊழல் புகார்கள் பதிவாகி இருக்கு.
இதையும் நான் சொல்ல CVC அறிக்கை தான் சொல்லுது. ஒன்றிய அமைச்சக அதிகாரிகளுக்கு எதிராக மட்டும் கடந்த ஆண்டு 1,15,203 புகார்கள் பதிவாகி இருக்கு. இதுல உள்துறை அதிகாரிகள் மீது மட்டும் 46 ஆயிரத்து 643 புகார்கள் பதிவாகி இருக்கு. இவங்க தான் ஊழலை ஒழிக்க போறோம் அப்படின்னு இன்னைக்கு பேசிட்டு இருக்காங்க… நடிச்சுட்டு இருக்காங்க….
இவங்க பண்ண தப்பு எல்லாம் மூடி மறைச்சு, நம் மீது வீண் பழியை சுமத்தி, இது பற்றி எல்லாம் திமுக பேசுதே…. திமுக இருக்கின்ற கூட்டணி கட்சி பேசுதே என்று ஆத்திரம் ஏற்பட்டு, கோபம் ஏற்பட்டு, எரிச்சல்ல நம்மை பழி வாங்குவதற்காக.. இன்று சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என நம்மளை எல்லாம் மிரட்டி பாக்குறாங்க. இதையெல்லாம் கண்டு அஞ்சி… நடுங்கி.. ஒடுங்கி.. விடுகிற கட்சி திமுக அல்ல. திமுக என்பது பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சிற மாட்டோம் என தெரிவித்தார்.