
தமிழக பாஜகவில் இருந்து சமீப காலமாகவே பல முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். இது தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என கட்சியினர் கூறி வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்று விமர்சித்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலையிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை கூறியதாவது, அதிமுகவுடன் எங்கள் கூட்டணி தொடர்கிறது. எதற்கும் சரி என்று மட்டும் சொல்வதற்கு எங்கள் கூட்டணி திமுகவை போன்று கிடையாது. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கிறது. பாஜக வளர்ந்து வருவதால் இதுபோன்ற சில விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அது இயற்கையானது என்று கூறினார்.