
கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான கேள்வி பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேமுதிக, பாமக கூட்டணி உடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா ? என்பதை உங்கள் கிட்ட சொல்லனுமா ? ஒரு அரசியல் கட்சி என்பதால் எங்களோடு எல்லாரும் பேசுவாங்க. யார் யார் பேசுவாங்க என நாங்க சொல்ல முடியாது…
செய்தி ஆயிரம் போடுவாங்க…. பேப்பர் விற்க வேண்டும்… ஊடகம் பார்க்க வேண்டும் என்பதற்காக பரபரப்பாக போடுவாங்க… பரபரப்பாக போடுவாங்க…. ஊடகங்களில் செய்திகள் பரபரப்பா வரும்…. அதெல்லாம் ஒன்னும். அதனால எப்படி இருந்தாலும் சரி, ஒரு இயர்ஸ் கணக்கில் இல்ல… மன்த்ஸ் கணக்கில் இல்ல… இன்னும் ஒரு மாசம் இருக்குது. வெயிட் பண்ணுங்க, அதுவரை பார்த்தீர்கள் என்றால், எந்தெந்த கட்சி எங்களோடு கூட்டணியில் இருக்கிறது என்பதை கண்டிப்பா எங்களுடைய பொதுச்செயலாளர் சொல்லுவார்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சி வருவதெல்லாம் சஸ்பென்ஸ். இப்போ சொல்லணும்னு அவசியம் இல்ல அதெல்லாம்… ஒரு ஆர்வத்துல கேக்குறீங்க நீங்க… லாஸ்ட் மினிட்ஸ்ல எது வேணாலும் நடக்கலாம், புரியுதுங்களா..? அப்படித்தானே கடந்த காலத்துல எவ்வளவு எலெக்ஷன் பார்த்திருப்பீங்க…. லாஸ்ட் மூணு நாள், நாலு நாள் முன்னாடி கூட அணி மாறுகின்ற நடைமுறை எல்லாம் தமிழக அரசியல் வரலாற்றில் நடந்து தானே இருக்கு. அதனால எல்லாமே சாத்திய கூறுகள் உண்டு, Let’s wait and see…
அதிமுக பாஜக கூட்டணி என்பதுதேய்ந்து போன ரெக்கார்டு… தேஞ்சு போன ரெகார்ட் மாதிரி அதே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. இனி அந்த கேள்விக்கே இடம் இல்லை, கேள்வியே எழாது. அதுதான் ஃபுல் ஸ்டாப் வச்சாச்சு. பாஜகவை யார் விமர்சனம் பண்ணுவதில்லை. DMK சும்மா இங்க விமர்சனம் பண்ணிட்டு, அங்க மோடி காலில் விழுந்துட்டு வராங்க…. இங்க விமர்சனம் பண்ணிட்டு, அங்க போய் பல்லக்கு தூக்கிட்டு வராங்க, புரியுதுங்களா ? அந்த மாதிரி நாங்க கிடையாது. எங்களை பொறுத்தவரை தோழமையுடன் இருந்தோம்… இப்போ பாத்தீங்கன்னா…. எதிரி. எதிரி என்ற கண்ணோட்டத்து தான் நிச்சயமாக பார்ப்போம். அதனால அதுக்கு உண்டான விமர்சனங்கள் கண்டிப்பாக வரும். ஓகேவா, ஏற்கனவே பண்ணிட்டு இருக்கோம், கண்டிப்பா வரும் என பேசினார்.