பாஜகவினருக்கு தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கோடைக்காலம் துவங்கி உள்ள இன்றைய சூழலில் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கும் பணியில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுவீச்சில் ஈடுபட வேண்டும். அந்த தண்ணீர், மோர் பந்தல்களை தினசரி பராமரிக்க வேண்டும். மக்கள் தேடி வந்து பயன்படுத்தும் வகையில் அங்கு நல்ல சூழலை உருவாக்கி தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.