
மேற்குவங்க மாநிலத்தில் பாஜக தலைவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு பர்தாமான் பகுதியில் பாஜக தலைவர் ராஜுஜா காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதில் அவருடன் காரில் இருந்த 3 வேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாஜக தலைவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ரிஜுஜா மீது சட்டவிரோத நிலக்கரி வியாபாரம் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.