கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூர், பாஜக சிறுபான்மை தலைவரின் வீட்டில் தீ வைத்து எரித்தது. மணிப்பூரில் பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாநில தலைவர் அஸ்கர் அலி நேற்று முன்தினம் வக்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து தனது சமூக வலை பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் நேற்று ஒரு கும்பல் அவரது வீட்டுக்கு தீ வைத்தது. நேற்று அவரது வீட்டிற்கு வெளியே திரண்ட கும்பல் ஒன்று வீட்டை சேதப்படுத்தி தீ வைத்தது. இதன் பிறகு அலி இணைய ஊடகங்களில் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர் மன்னிப்பு கேட்டார். முன்னதாக இம்பால் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதியில் வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டது.

 

பேரணியில் 5000 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். இதன் காரணமாக அங்குள்ள போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.